தொழிலாளியிடம் 1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி


தொழிலாளியிடம் 1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 20 Oct 2021 11:05 PM IST (Updated: 20 Oct 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியிடம் 1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை, 
கோவிலாபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது42). கூலி தொழிலாளியான இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்பினார். அப்போது ஆன்லைன் விளம்பரத்தில் துபாயில் கம்பி கட்டும் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார்களாம். இதை தொடர்ந்து பழனிச்சாமி அவர்கள் கூறிய படி ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 500 செலுத்தி உள்ளார். இதையடுத்து அவருக்கு தபாலில் விசா, விமான டிக்கெட் வந்துள்ளது. அதன்பிறகு பழனிச்சாமி துபாய் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அதிகாரிகள் அவரது விசாவை சோதித்தபோது அவை போலி என தெரியவந்தது. இதுகுறித்து பழனிசாமி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் கொடுத்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

Next Story