கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் 19 பேர் பதவியேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் 19 பேர் பதவியேற்றுக்கொண்டனர்
கள்ளக்குறிச்சி
மாவட்ட ஊராட்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 19 வார்டுகளிலும் தி.மு.க.வே வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையாக விளங்கியது.
இந்த நிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் (மகளிர் திட்ட இயக்குனர்) தேவநாதன் தலைமையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் மஞ்சுளா முன்னிலை வகித்தார்.
பதவிப்பிரமாணம்
விழாவில் 1-வது வார்டு கவுன்சிலர் அஸ்வினி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இவரை தொடர்ந்து, 2-வது வார்டு சுகன்யா, 3-வது வார்டு அமிர்தம், 4-வது வார்டு ராஜேந்திரன், 5-வது வார்டு கோவிந்தராஜ், 6-வது வார்டு ஜெய்சங்கர், 7-வது வார்டு தங்கம், 8-வது வார்டு அகிலாபானு அருள், 9-வது வார்டு முருகேசன், 10-வது வார்டு அலமேலு, 11-வது வார்டு வேல்முருகன், 12-வது வார்டு கலையரசி, 13-வது வார்டு புவனேஸ்வரி பெருமாள், 14-வது வார்டு பழனியம்மாள், 15-வது வார்டு ராஜராஜேஸ்வரி, 16-வது வார்டு பிரியா, 17-வது வார்டு அமுதா, 18-வது வார்டு சுந்தரமூர்த்தி, 19-வது வார்டு ஜி.ஆர்.வசந்தவேல் ஆகியோர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story