நில மோசடியில் ஈடுபட்டதாக ரியல் எஸ்டேட் அதிபர் கைது
நில மோசடியில் ஈடுபட்டதாக ரியல் எஸ்டேட் அதிபர் கைது
வேலூர்
குடியாத்தம் செட்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரிடம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான நந்தகோபால் (43) என்பவர் வீட்டு மனை விற்பனைக்கு உள்ளதாக கூறினார். அந்த மனையை வாங்க தேவராஜ் ரூ.2 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் நிலத்தை வழங்காமல் நந்தகோபால் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து கொடுத்த பணத்தை தேவராஜ் திருப்பி கேட்கவே, நந்தகோபால் அதை கொடுக்கவில்லை. விசாரித்தபோது நந்தகோபால் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, தேவராஜ் வேலுர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் நந்தகோபால் பலரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த நந்தகோபாலை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story