கந்தர்வகோட்டை அருகே மின்னல்- மின்சாரம் பாய்ந்து 18 ஆடுகள் செத்தன
கந்தர்வகோட்டை அருகே மின்னல்- மின்சாரம் பாய்ந்து 18 ஆடுகள் செத்தன.
கந்தர்வகோட்டை:
8 ஆடுகள் செத்தன
கந்தர்வகோட்டை அருகே உள்ள புனல் குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தரசன். விவசாயியான இவர் சில ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா அங்குள்ள வயல்வெளிக்கு நேற்று ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டி சென்றார். ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது அங்கிருந்த மின்சார கம்பி அறுந்து கீழே விழுந்தது. இதில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் மின்சார கம்பியின் மீது கால்கள் பட்டதில் மின்சாரம் பாய்ந்து 8 ஆடுகள் செத்தன. உயிரிழந்த ஆடுகள் ரூ.2 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மின்சாரம் பாய்ந்து ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மின்னல் தாக்கி 10 ஆடுகள் செத்தன
கந்தர்வகோட்டை அருகில் உள்ள பிசானத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதாம்பாள், இளங்கோவன், முத்துக்கண்ணு ஆகியோர் அந்த பகுதியில் உள்ள முந்திரிக்காட்டில் தங்களுக்கு சொந்தமான வெள்ளாடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் மரங்களுக்கு கீழ் நின்றுகொண்டிருந்த வெள்ளாடுகளில் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே 10 வெள்ளாடுகள் செத்தன. இதுகுறித்து அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர், கந்தர்வகோட்டை வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த வெள்ளாடுகளை பார்த்து ஆடுகளின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறி அரசிடம் எடுத்துக் கூறி உரிய நிவாரணம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தனர். இதன்பிறகு கால்நடை மருத்துவரால் இறந்த வெள்ளாடுகள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. மின்னல் தாக்கியதில் 10 வெள்ளாடுகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story