கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2021 12:05 AM IST (Updated: 21 Oct 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நல வாரிய அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பண்டிகைக்கால போனஸ் வழங்கிடவேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கட்டுமான சங்க மாவட்ட பொருளாளர் பரமசிவம் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலாளர் திருமலை. உழைக்கும் பெண்கள் மாவட்ட அமைப்பாளர் சாராள், மாவட்ட பொதுச்செயலாளர் ராமர் சி.ஐ.டி.யூ.  மாவட்ட துணைத் தலைவர் வேலுசாமி ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Next Story