அம்மன் கோவிலில் 5 பவுன் நகை கொள்ளை


அம்மன் கோவிலில் 5 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 21 Oct 2021 1:51 AM IST (Updated: 21 Oct 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே அம்மன் கோவிலில் 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கருங்கல்,
கருங்கல் அருகே அம்மன் கோவிலில் 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அம்மன் கோவில்
கருங்கல் அருகே உள்ள பாலூர் அய்யன்விளையில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் 12 சன்னதிகள் உள்ளன.
இந்த சன்னதிகளில் தினசரி மாலையில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலையில் பூஜைகளை முடித்து கோவிலை பூட்டி விட்டு சென்றனர்.
நகை கொள்ளை 
இந்தநிலையில் நேற்று காலை கோவில் நிர்வாகி ஒருவர் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தார். அப்போது, கோவில் வளாகத்தில் உள்ள இசக்கியம்மன், பத்ரேஸ்வரி அம்மன் உள்ளிட்ட 3 சன்னதிகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது, அங்கு அம்மன் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தாலி, கண்விழி, நெற்றி பொட்டு உள்பட 5 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.
மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்களை உடைக்க முயன்றதும் தெரிய வந்தது. நள்ளிரவில் ேகாவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை 
பின்னர் இதுபற்றி கோவில் செயலாளரான பூட்டேற்றி காஞ்சிரங்காட்டுவிளையை சேர்ந்த சுரேஷ்ராஜ் (வயது 35) என்பவர் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். 
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

Next Story