சேலத்தில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்


சேலத்தில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2021 2:14 AM IST (Updated: 21 Oct 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

சேலம், அக்.21-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகள் கைகளில் தாலி ஏந்தி நின்று கோஷங்கள் எழுப்பியபடி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேளாண் சட்டங்கள்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
இதில் மத்திய அரசு கொண்டு வந்து உள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்ததை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
தாலி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கத்திரி, வெண்டை, பாகற்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக கோர்த்து, அதை கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மீது அணிவித்து இருந்தனர். மேலும் வேளாண் சட்டங்களால் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி மஞ்சள் கயிற்றால் ஆன தாலி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர், அகில இந்திய மக்கள் சேவை விவசாயிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

Next Story