விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே, நகர விசுவ இந்து பரிஷத் அமைப்பு சார்பில், வங்காளதேசத்தில் நவராத்திரி பூஜையின் போது இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். கோட்ட பொறுப்பாளர் சுப்பையா, மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் கருப்பசாமி, மாவட்ட இணைச்செயலாளர்கள் தளவாய், குருசாமி, பா.ஜனதா மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் மாரியப்பன், பஜ்ரங்தள மாவட்ட அமைப்பாளர் சபரிமணி, இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story