கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது


கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 21 Oct 2021 3:50 AM IST (Updated: 21 Oct 2021 3:53 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது

களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழவடகரையை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 46). இவர் திருக்குறுங்குடி வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டு கோழிக்கூண்டுக்குள் நேற்று 10 அடி நீளமுடைய மலைப்பாம்பு புகுந்து 3 கோழிகளை விழுங்கியது.

இதைப்பார்த்த பிரேம்குமார் இதுபற்றி களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். உடனே புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் உத்தரவின் பேரில், வனச்சரகர் பாலாஜி மேற்பார்வையில் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு விரைந்து சென்று மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை பத்மநேரி பீட் ராவுத்தார் கோவில் சரக வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

Next Story