சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஒரு மனு
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடியிடம், திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடியிடம், திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது
திருப்பூர்- பல்லடம் ரோடு உழவர் சந்தை பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலையோரத்தில் வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வரும் வியாபாரிகளையும் அங்கு வியாபாரம் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சாலையோரம் வியாபாரம் செய்து வருகிற பலரது குடும்பத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்துதரும் வரை, ஏற்கனவே வியாபாரம் செய்யும் இடங்களிலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
------
Related Tags :
Next Story