வட்டன்விளை முத்தாரம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு


வட்டன்விளை முத்தாரம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 21 Oct 2021 5:37 PM IST (Updated: 21 Oct 2021 5:37 PM IST)
t-max-icont-min-icon

வட்டன்விளை முத்தாரம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது

உடன்குடி:
பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு, பூஜை நடந்தது. இதையொட்டி நண்பகல் 12 மணிக்கு அம்மன், செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார வழிபாடும், சிறப்புதீபாராதனையும் நடந்தது. நண்பகல் ஒரு மணி அளவில் மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டன்விளை ஊர்மக்கள் செய்திருந்தனர்.

Next Story