துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
கேரள வனப்பகுதியில் துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து, நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்தார்.
கூடலூர்
கேரள வனப்பகுதியில் துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து, நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்தார்.
துப்பாக்கியுடன் வேட்டை
தமிழக-கேரள எல்லையில் நீலகிரி மாவட்டம் உள்ளது. இங்குள்ள பந்தலூர் அருகே எருமாடு போலீஸ் நிலையத்தில் சிஜூ(வயது 43) என்பவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் கேரள வனப்பகுதியில் வன கொள்ளையை தடுக்க ஆங்காங்கே தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
அந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை அந்த மாநில வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது முத்தங்கா சரணாலயத்துக்கு உட்பட்ட நூல்புழா பகுதியில் இரவில் கையில் நாட்டு துப்பாக்கி மற்றும் இடுப்பில் கத்தியுடன் தலையில் மின்விளக்கு பொருத்தியவாறு மர்ம நபர் வனப்பகுதியில் வேட்டைக்கு செல்வது பதிவாகி இருந்தது.
பணியிடை நீக்கம்
இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது அந்த நபர், போலீஸ்காரர் சிஜூ என்பது தெரியவந்தது. அவர் மீது முத்தங்கா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நீலகிரி மாவட்ட காவல்துறை கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து சிஜூவை பணியிடை நீக்கம் செய்து, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். அவரது தந்தை ஜோஸ் மீது தமிழக வனத்துறையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story