திண்டுக்கல்லில் ரெயில்வே மேம்பாலம் அருகே குளம் போல் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் அவதி


திண்டுக்கல்லில் ரெயில்வே மேம்பாலம் அருகே குளம் போல் தேங்கும் மழைநீர் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 21 Oct 2021 9:06 PM IST (Updated: 21 Oct 2021 9:06 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ரெயில்வே மேம்பாலம் அருகே குளம் போல் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.

முருகபவனம்:
திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக காலையில் வெயில் சுட்டெரிப்பதும், மாலையில் மழை விட்டு, விட்டு பெய்வதுமாக இருந்து வருகிறது. இதனால் மழைநீர் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் திருச்சி சாலை மேம்பாலம் இறக்கத்தின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால்கள் அடைபட்டு இருக்கின்றன. இதனால் மழைநீர் செல்ல வழியின்றி குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு தேங்கிய மழைநீரை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிகமாக  நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் மழை விட்டு, விட்டு பெய்து வருவதால் அங்கு தண்ணீர் தேங்குவது தொடர் கதையாக உள்ளது. எனவே மேம்பாலத்தின் இறக்கத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story