நெல் கொள்முதல் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகை


நெல் கொள்முதல் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 21 Oct 2021 9:15 PM IST (Updated: 21 Oct 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதல் நிலையத்தை அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தற்போது நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. இதில் மட்டப்பாறை, விளாம்பட்டி ஆகிய நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு கூலி மற்றும் இதர செலவுக்காக ரூ.38 வாங்குவதாகவும், ராமராஜபுரத்தில் கூலி மற்றும் இதர செலவுக்காக ரூ.48 வாங்குவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினார்கள். 
இதையடுத்து அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன், நல்லதம்பி மற்றும் முன்னாள் திண்டுக்கல் எம்.பி. உதயகுமார், அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி, முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதுரை ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு சென்று ராமராஜபுரத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குரு வெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நெல் கொள்முதல் நிலையத்தில் கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது, வியாபாரிகளிடம் தனியாக நெல் கொள்முதல் செய்ய கூடாது, விவசாயிகளிடம் மட்டுமே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story