அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம்புரண்டது
சரக்கு ரெயில் தடம்புரண்டது
அரக்கோணம்
அரக்கோணத்தில் இருந்து நேற்று மாலை முகுந்தராயபுரத்திற்கு ரெயில் தண்டவாளங்கள் ஏற்றி செல்வதற்காக 54 காலி பெட்டிகளுடன் சரக்கு ரெயில் பணிமனை பகுதியில் இருந்து சென்றது. அப்போது என்ஜின் பகுதியில் இருந்து மூன்றாவது பெட்டியின் பின் பக்கம் உள்ள 4 சக்கரங்கள் மற்றும் நான்காவது பெட்டியின் முன் சக்கரங்களும் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டது.
இதை அறிந்த சரக்கு ரெயில் என்ஜின் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தி, இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தடம்புரண்ட சரக்கு ரெயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் திருத்தணி மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில்கள் சுமார் 25 நிமிடங்கள் காலதாமதமாக சென்றன. மேலும், சரக்கு ரெயில் தடம்புரண்டதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story