கடலூர் முதுநகர் அருகே நின்ற பேருந்து மீது ஆம்னி பஸ் மோதல்; 12 பேர் படுகாயம்
கடலூர் முதுநகர் அருகே நின்ற பேருந்து மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர் முதுநகர்,
தனியார் பேருந்து
விருத்தாசலத்தில் இருந்து நேற்று அதிகாலை தனியார் பேருந்து பயணிகளுடன் கடலூர் நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்து கடலூர் முதுநகர் அடுத்த சேடப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்காக நிறுத்தப்பட்டது. அந்த சமயத்தில் கோவையில் இருந்து பயணிகளுடன் புதுச்சேரி நோக்கி வந்த ஆம்னி பஸ் திடீரென பஸ் நிறுத்தத்தில் நின்ற பேருந்தின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பகுதியும், தனியார் பேருந்தின் பின்பகுதியும் சேதமடைந்தது. இ்ந்த விபத்தில் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன், சேடப்பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம், குமார், ஆபத்தாரணபுரத்தை சேர்ந்த அன்பழகி, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த இனியன், சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சரோஜா உள்பட 2 பஸ்களில் வந்த 12 பேர் பலத்த காயமடைந்து வலியால் அலறினர். இதைபார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து விபத்தில் சிக்கிய 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் கடலூர்-விருத்தாசலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story