போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் 5 பேர் மீது வழக்கு


போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால்  5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Oct 2021 10:40 PM IST (Updated: 21 Oct 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

போலீசாருக்கு தகவல் தெரிவிக்காததால் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கமுதி, 
கமுதி அருகே ராமசாமிபட்டியை சேர்ந்த முருகேசன் (வயது42) என்பவரின் மகள் நந்தினி (16). இவர் அங்கு உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து, பாட்டி வீட்டில் இருந்து வந்தார்.இந்தநிலையில் பாட்டியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மன அழுத்தத்தில் இருந்த இளம்பெண் நந்தினி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்காமல், உறவினர்கள் நந்தினி உடலை எரித்து விட்டனர்.தகவலறிந்த அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சுந்தரராஜ் கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், தந்தை முருகேசன் (42) மற்றும் பாட்டி லெட்சுமி (70) உள்பட உறவினர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story