மாவட்ட செய்திகள்

காரிமங்கலம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Lorry driver commits suicide

காரிமங்கலம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

காரிமங்கலம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
காரிமங்கலம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அடுத்த சொட்டாண்டஅள்ளியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் மாரியப்பன் (35), லாரி டிரைவர். இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினையால் மனமுடைந்த மாரியப்பன் அவருக்கு சொந்தமான தார்சு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.