மாவட்ட செய்திகள்

பாகாயத்தில் நடந்து சென்ற நர்சிடம் 3 பவுன் நகை பறிப்பு + "||" + 3 pound jewelery flush with the walking nurse

பாகாயத்தில் நடந்து சென்ற நர்சிடம் 3 பவுன் நகை பறிப்பு

பாகாயத்தில் நடந்து சென்ற நர்சிடம் 3 பவுன் நகை பறிப்பு
நடந்து சென்ற நர்சிடம் 3 பவுன் நகை பறிப்பு
வேலூர்

வேலூர் பாகாயம், வளர்புரம் பகுதியை சேர்ந்த நிக்கோலின் என்ற பெண் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்றபோது அவரை மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நிக்கோலின் திருடன் திருடன் என கூச்சலிட்டார். ஆனால் மர்மநபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
பாகாயம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.