அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2021 12:04 AM IST (Updated: 22 Oct 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குளித்தலை
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் குளித்தலை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் விஜயகுமார், சாலை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஞானசேகரன், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறை, கால்நடை துறை, கல்வித் துறை சார்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்தவேண்டும், மருத்துவமனைகள் முன்பணம்கேட்பதை தடை செய்ய வேண்டும், மூன்றாம் நபர் நிர்வாகத்தை ரகசியமாக இரண்டாக பிரித்ததை கைவிட வேண்டும், காப்பீட்டு திட்ட குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Next Story