புதுச்சேரியில் பணியின்போது இறந்த போலீசாருக்கு ரங்கசாமி அஞ்சலி
காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரி, அக்.22-
காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு பணியின் போது உயிரிழந்த போலீசாருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி அஞ்சலி செலுத்தினார்.
காவலர் நினைவு தினம்
திபெத் எல்லையில் 1959-ம் ஆண்டு நடந்த சண்டையில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 20 காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி காவலர் நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவலர் நினைவு தினம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர்சிங் கிருஷ்ணியா தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ., ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அஞ்சலி
பின்னர் கடந்த ஆண்டு நாடு முழுவதும் உயிர்நீத்த (புதுச்சேரியில் 7 பேர்) காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஷ்வரன், பிரதிக்ஷா கோத்ரா, போலீஸ் சூப்பிரண்டுகள் திவ்யா, சுபம்கோஷ், ரங்கநாதன், மோகன்குமார், ரவிக்குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story