லோடு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் பலி


லோடு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்; என்ஜினீயரிங் மாணவர் பலி
x
தினத்தந்தி 22 Oct 2021 4:34 AM IST (Updated: 22 Oct 2021 4:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே லோடு ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பலியானார்.

பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி பொட்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஜெயச்சந்திரன் (வயது 19). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயச்சந்திரன் ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் நெல்லையில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து நேற்று மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

நெல்லை அருகே உள்ள புதூர் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக ஆலங்குளத்தில் இருந்து நெல்லை நோக்கி மளிகை ெபாருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு லோடு ஆட்டோ வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு ேநர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உடனடியாக சீதபற்பநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஜெயச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு ெசய்து லோடு ஆட்டோவை ஓட்டி வந்த ஆலங்குளத்தை சேர்ந்த வேல்முருகன் (45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story