2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 22 Oct 2021 5:16 AM IST (Updated: 22 Oct 2021 5:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நெல்லை:
சேரன்மாதேவி அருகே வெள்ளாங்குளி அண்ணா நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் முத்துபாலன் (வயது 26). இவர் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சேரன்மாதேவி போலீஸ் நிலையத்தில் உள்ளன. எனவே முத்துபாலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் நாங்குநேரி அருகே தம்புபுரத்தைச் சேர்ந்த காளிகண்ணன் மகன் நவீன் (21) மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் உள்ளன. எனவே அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில் முத்துபாலன், நவீன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.  இதனை ஏற்று முத்துபாலன், நவீன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டை சிைற அதிகாரியிடம் போலீசார் வழங்கினர்.

Next Story