மின்னல் தாக்கி 35 ஆடுகள் செத்தன


மின்னல் தாக்கி  35 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 22 Oct 2021 3:51 PM IST (Updated: 22 Oct 2021 3:51 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் அருகே மின்னல் தாக்கி 35 ஆடுகள் செத்தன.

வெள்ளகோவில்
வெள்ளகோவில் அருகே மின்னல் தாக்கி  35 ஆடுகள் செத்தன.
ஆடுகள்
வெள்ளகோவில் அருகே உள்ள பச்சாபாளையம் கிராமம் கொழிஞ்சி காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் சிவகணேசமூர்த்தி. இவருக்கு 6 ஏக்கர் நிலத்தில் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்புக்குள்  84 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இதற்காக தென்னந்தோப்பில் பட்டி அமைத்துள்ளார். 
தினமும் காலையில் காடுகளுக்கு மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், மாலையில் மேய்ச்சல் முடிந்து திரும்பி வந்ததும் பட்டியில் அடைப்பதுவழக்கம். 
 அதேபோல்  நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மாலையில் வந்ததும் அவற்றை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.  அன்று இரவு வெள்ள கோவில் பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. 
35 ஆடுகள் செத்துக்கிடந்தன
 இந்த நிலையில் நேற்று காலை சிவகணேசமூர்த்தி ஆடுகளை அடைத்து வைத்திருந்த பட்டிக்கு சென்றார். அப்போது பட்டி அமைத்து இருந்த தென்னை மரம் மின்னல் தாக்கி கருகி இருந்தது. அங்கு மரத்திற்கு கீழே பட்டியில் 35 ஆடுகள் செத்துக்கிடந்தன.  இதில் பெரிய ஆடுகள் 31ம், குட்டி ஆடுகள் 4ம் ஆகும். 
இதுகுறித்து தகவலறிந்த காங்கயம் தாசில்தார் சிவகாமி, வெள்ளகோவில் நில வருவாய் ஆய்வாளர் நிர்மலா தேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். கால்நடை மருத்துவர் ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து பின்னர் ஆடுகளை ஒரே குழியில் போட்டு புதைத்தனர். செத்துப்போது ஆடுகளின் மதிப்பு ரூ.3 லட்சத்தி 50 ஆயிரம் இருக்கும் சிவகணேசமூர்த்தி கூறினார்.

Next Story