பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஜோதிடர் கைது
உடுமலை அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஜோதிடரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உடுமலை
உடுமலை அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஜோதிடரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
உடுமலையை அடுத்து எலையமுத்துர் அருகே உள்ள பார்த்தசாரதிபுரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி வயது 35. 2ம் வகுப்பு வரை படித்த இவர் ஜோதிடராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மனநல வளர்ச்சி இல்லாத 27 வயது பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அங்கு பால்பாண்டி வந்து அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்து வந்து கற்பழித்ததாக கூறப்படுகிறது.
ஜோதிடர் கைது
இது குறித்து தெரியவந்ததும் அந்த பெண்ணின் அக்காள் உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையொட்டி உடுமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிடர் பால்பாண்டியை கைது செய்தனர்.
----
Related Tags :
Next Story