நிரம்பி வழியும் தடுப்பணைகள்
தளி, அமராவதி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தடுப்பணை நிரம்பி விட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தளி
தளி, அமராவதி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தடுப்பணை நிரம்பி விட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பலத்த மழை
உடுமலை, தளி, அமராவதி சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாகும். சாகுபடி பணிகளுக்கு திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு, ஆழ்குழாய்கிணறுகள், பருவமழை கை கொடுத்து வருகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு நீண்டகால பயிர்கள், காய்கறிகள், தானியங்கள், மானாவாரி சாகுபடி நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்து நீராதாரங்களில் தேங்குவதுடன் நிலத்தடி நீர்இருப்பையும் உயர்த்தி வருகிறது. இதனால் விவசாய பணிகள் தடையில்லாமல் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் கடந்த ஒருவார காலமாக அமராவதி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி வருவதுடன் நீராதாரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அந்த வெள்ளம் நீர் வழித்தடங்களின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் தேங்கி வழிந்த வண்ணம் உள்ளது. இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு நிலத்தடி நீர்இருப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
அத்துடன் வடகிழக்கு பருவமழையும் தீவிரம் அடையும் சூழல் உள்ளதால் இந்த ஆண்டு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.நீண்ட நாளைக்கு பிறகு ஒரே முறையில் நீராதாரங்கள் நிரம்பும் அளவிற்கு மழை பெய்து உள்ளதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story