சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 22 Oct 2021 5:09 PM IST (Updated: 22 Oct 2021 5:09 PM IST)
t-max-icont-min-icon

சட்ட விழிப்புணர்வு முகாம்

திருப்பூர்
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று பத்மாவதிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நோக்கம், பயன்பாடுகளை இலவச சட்ட உதவி மைய வக்கீல் திங்களவள் பேசினார்.
2வது கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா, மாணவர்கள் இந்த பருவத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இந்த பருவத்தில் ஏற்படும் இனக்கவர்ச்சி, சமூக ஊடங்களின்மீதான கவன ஈர்ப்பு போன்றவற்றில் இருந்து விழிப்புடன் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும். நீதிமன்றங்கள், இலவச சட்ட உதவி மையங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை மனோன்மணி நன்றி கூறினார்.

Next Story