டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் காயாமொழி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கொரானா தடுப்பூசி முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் சாம்ராஜ் முகாமினை தொடங்கி வைத்தார். காயாமொழி மருத்துவ அலுவலர் டாக்டர் அஜெய் தலைமையில் மருத்துவ அலுவலர் அம்பிகாபதி, ஆறுமுகநேரி சுகாதார அலுவலர் மகாராஜன், பிச்சிவிளை கிராம சுகாதார செவிலியர்கள் மோகனா மற்றும் மங்களம் ஆகியோர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். இதில் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு 2-வது தடுப்பூசி போடப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் செய்து இருந்தார்.
Related Tags :
Next Story