பெட்ரோல் ஊற்றி அண்ணனை எரித்துக்கொன்ற லாரி டிரைவர்


பெட்ரோல் ஊற்றி அண்ணனை எரித்துக்கொன்ற லாரி டிரைவர்
x
தினத்தந்தி 22 Oct 2021 9:25 PM IST (Updated: 22 Oct 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே லாரி டிரைவர் தனது அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார். கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி

ஆரணி அருகே லாரி டிரைவர் தனது அண்ணனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார். கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் தரப்பில் கூறப்படுவதாவது:-

முன்விரோதம்

ஆரணியை அடுத்த விளை கிராமத்தைச் சேர்ந்த பட்டு நெசவுத் தொழிலாளி புருஷோத்தமன் (வயது 38) என்பவருக்கும், அவரின் தம்பியான லாரி டிரைவர் ராஜசேகர் (36) என்பவருக்கும் சொத்துத் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. 

ராஜசேகரின் மோட்டார்சைக்கிளை எடுத்து 2 நாட்கள் ஓட்டி விட்டு வீட்டுக்கு வந்து ஒப்படைத்த புருஷோத்தன் மீது தம்பி ராஜசேகர் திருட்டுப்பட்டம் கட்டியதாகக் கூறப்படுகிறது. 

அதில் ஏற்பட்ட தகராறாலும், சொத்துத் தகராறில் ஏற்கனவே இருந்து வந்த முன்விரோதத்தாலும் வீட்டில் தனியாகத் தூங்கி கொண்டிருந்த புருஷோத்தமன் மீது பெட்ரோலை ஊற்றி ராஜசேகர் தீ வைத்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல் கபட நாடகம் ஆடி உள்ளார். 

அதில் தீக்காயம் அடைந்த புருஷோத்தமன் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அங்கு, சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கொலை வழக்காக மாற்றம்

ஏற்கனவே கொலை முயற்சி வழக்காக ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story