முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு


முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 22 Oct 2021 9:34 PM IST (Updated: 22 Oct 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

தேனி:

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது கடந்த சில தினங்களாக கேரள மாநில மற்றும் முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

 இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 20-ந்தேதி அணையின் நீர்மட்டம் 134.25 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 2,629 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,867 கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டது.

 இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 135.45 அடி, நீர்வரத்து வினாடிக்கு 3,805 கனஅடியாகவும் இருந்தது. 

168 மெகாவாட் மின்உற்பத்தி
வினாடிக்கு 2,050 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் லோயர்கேம்ப்பில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:- 
முல்லைப்பெரியாறு அணை- 28, தேக்கடி- 6.8, கூடலூர்- 7.6, சண்முகா நதி அணை-27.5, உத்தமபாளையம்- 38.3, வீரபாண்டி-55, வைகை அணை-1, மஞ்சளாறு- 13, சோத்துப்பாறை-8, மருதாநதி-40.4, அரண்மனைப்புதூர்- 1, போடி-25.2.

Next Story