பாறை உருண்டு விழுந்தது


பாறை உருண்டு விழுந்தது
x
தினத்தந்தி 22 Oct 2021 10:31 PM IST (Updated: 22 Oct 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

கம்பம்மெட்டு மலைப்பாதையில் பாறை உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கம்பம்: 

தமிழகத்தையும், கேரளாவையும் இணைக்கும் முக்கியமான மலைப்பாதையில் கம்பம்மெட்டு ஒன்றாகும். கம்பம்மெட்டு மலை அடிவாரப்பகுதியில் இருந்து சுமார் 7 கி.மீட்டர் தூரம் உள்ள கம்பம்மெட்டு மலைப்பாதையில் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த 3 நாட்களாக கம்பம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மழை காரணமாக கம்பம்மெட்டு மலைப்பாதையில் உள்ள 6-வது கொண்டை ஊசி வளைவு அருகே பாறைகள் உருண்டு சாலையின் குறுக்கே விழுந்தது. 

இதுகுறித்து அந்த வழியாக சென்ற உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன், உத்தமபாளையம் நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் குமணனுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இளநிலை பொறியாளர் உதயகுமார் மற்றும் நெடுஞ்சாலை பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் மலைப்பாதையில் உருண்டு விழுந்த பாறைகளை அகற்றினர். இதனால் அந்த மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story