நாடார் மகாஜன சங்க தேர்தலில் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும்
நாடார் மகாஜன சங்க தேர்தலில் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று தேனியில் நடந்த ஒருங்கிணைந்த நாடார் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தேனி:
ஆலோசனை கூட்டம்
தேனி பழைய அரசு மருத்துவமனை அருகில் உள்ள தேனி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த நாடார் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேவாரம் தெற்குத்தெரு இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் கதிரேசன் தலைமை தாங்கி பேசினார். தேனி தெற்குப்பேட்டை நாடார் உறவின்முறை தலைவர் சாமுவேல் மோகன் முன்னிலை வகித்தார்.
நாடார் மகாஜன சங்க செயற்குழு உறுப்பினர் கணேசன் வரவேற்றார்.
நாடார் பேரவை மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எர்ணாவூர் நாராயணன், சாமிதோப்பு பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளார், நாடார்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் பெரீஸ் மகேந்திரவேல், தமிழ்நாடு நாடார் பேரவை மாநில துணைத்தலைவர் ஆசைத்தம்பி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் நாடார் சங்கங்கள் மற்றும் சமுதாய வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கல்வி, வேலைவாய்ப்பு
மேலும் சமுதாய குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்ற நாடார் சங்கங்களின் நிர்வாகிகள் பேசும்போது, நாடார் மகாஜன சங்க தேர்தலில் கரிக்கோல்ராஜை நீக்கிவிட்டு மற்றொருவரை பொதுச்செயலாளராக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பயிற்சி மையங்கள் தொடங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் நாடார் பேரவை பொருளாளர் கண்ணன், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனர் ராஜகுமார், காமாட்சிபுரம் இந்து நாடார்கள் உறவின்முறை செயலாளர் சந்திரசேகரன், சின்னமனூர் நாடார்கள் முன்னேற்ற சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், பூதிப்புரம் நாடார்கள் முன்னேற்ற சங்க செயலாளர் லட்சுமணன் மற்றும் நாடார் சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story