வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவிகளை தி.மு.க. பிடித்தது.


வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவிகளை தி.மு.க. பிடித்தது.
x
தினத்தந்தி 22 Oct 2021 11:08 PM IST (Updated: 22 Oct 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவிகளை தி.மு.க. பிடித்தது.

வேலூர்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவிகளை தி.மு.க. பிடித்தது. 

மாவட்ட ஊராட்சி

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 

வேலூர் மாவட்ட ஊராட்சியில் உள்ள 14 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களை தி.மு.க.வும், ஒரு இடத்தை தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் கைப்பற்றியது. இதில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 20-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர்.

வேலூர்

இந்தநிலையில் வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர், துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் குமாரவேல்பாண்டியன் முன்னிலையில் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பாபு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல துணைத்தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஷ்ணவேணியும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்றவர்களை எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சியில் உள்ள 13 வார்டுகளில் தி.மு.க. 11 இடங்களையும், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடத்தையும் பிடித்து மொத்தமுள்ள 13 வார்டுகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. 

இந்தநிலையில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா முன்னிலையில் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. என்.கே.ஆர்.சூரியகுமா 7 வாக்குகள் பெற்று மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக வெற்றி பெற்றார். துணைத் தலைவர் பதவிகிக்கு போட்டியிட்ட பிரியதர்ஷனி ஞானவேலு 8 வாக்குள் பெற்று வெற்றி பெற்றார். 

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகோஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வன், ஹரிஹரன், வேளாண்மை துறை இணை இயக்குனர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 13 மாவட்ட கவுன்சிலர் பதவியில் 12 வார்டுகளில் தி.மு.க.வும், ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றது. நேற்று தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது இதில் தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயந்தி திருமூர்த்தி மாவட்ட குழு தலைவராகவும், தி.மு.க.வை சேர்ந்த எம்.நாகராஜ் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு, பதவி ஏற்றுக்கொண்டனர்.
3 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.

Next Story