விழுப்புரம் மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது மரக்காணத்தில் தேர்தல் நிறுத்திவைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது. இதில் மரக்காணம் ஒன்றியத்தில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிந்து நேற்று ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கும், 688 ஊராட்சிகளில் துணைத்தலைவர் பதவிக்கும் மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 12 ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றியது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கோலியனூர், காணை
கோலியனூர் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக சச்சிதானந்தம் (தி.மு.க.), துணைத்தலைவராக உதயகுமார் (தி.மு.க.) ஆகியோரும், காணை ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக கலைச்செல்வி (தி.மு.க.), துணைத்தலைவராக வீரராகவன் (தி.மு.க.) ஆகியோரும், கண்டமங்கலம் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக ஆர்.எஸ்.வாசன் (தி.மு.க.), துணைத்தலைவராக நஜீராபேகம் (தி.மு.க.) ஆகியோரும், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவராக சங்கீதாஅரசி (தி.மு.க.),
துணைத்தலைவராக ஜீவிதா (தி.மு.க.) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
முகையூர், மயிலம்
அதேபோல், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவராக ஓம்சிவசக்திவேல் (தி.மு.க.), துணைத்தலைவராக கோமதி (தி.மு.க.) ஆகியோரும், முகையூர் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவராக தனலட்சுமி (தி.மு.க.), துணைத்தலைவராக மணிவண்ணன் (தி.மு.க.) ஆகியோரும், வானூர் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவராக உஷா (தி.மு.க.), துணைத்தலைவராக பருவகீர்த்தனா (தி.மு.க.) ஆகியோரும், ஒலக்கூர் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவராக சொக்கலிங்கம் (தி.மு.க.), துணைத்தலைவராக
ராஜாராம் (தி.மு.க.) ஆகியோரும், மயிலம் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவராக யோகேஸ்வரி (தி.மு.க.), துணைத்தலைவராக புனிதா (தி.மு.க.) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
செஞ்சி, வல்லம்
செஞ்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவராக விஜயகுமார் (தி.மு.க.), துணைத்தலைவராக ஜெயபாலன் (தி.மு.க.) ஆகியோரும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவராக கண்மணி (தி.மு.க.), துணைத்தலைவராக விஜயலட்சுமி (தி.மு.க.) ஆகியோரும், வல்லம் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவராக அமுதா (தி.மு.க.), துணைத்தலைவராக மலர்விழி (தி.மு.க.) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நிறுத்தி வைப்பு
மாவட்டத்தில் மொத்தம் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 12 ஒன்றியங்களில் ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. இதில் மரக்காணம் ஒன்றியத்தில் மட்டும் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story