மாவட்ட செய்திகள்

காய்கறி மூட்டைக்குள் பதுக்கி ரூ.30 லட்சம் குட்கா கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது + "||" + The law of thugs

காய்கறி மூட்டைக்குள் பதுக்கி ரூ.30 லட்சம் குட்கா கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

காய்கறி மூட்டைக்குள் பதுக்கி ரூ.30 லட்சம் குட்கா கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
காய்கறி மூட்டைக்குள் பதுக்கி ரூ.30 லட்சம் குட்கா கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி, அக்.23-
திருச்சி-சென்னை பைபாஸ்சாலை சஞ்சீவிநகர் கோட்டை போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் காய்கறி மூட்டைக்குள் ஒரு டன் எடை கொண்ட ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பா மைசூரூவை சேர்ந்த சோமசேகர், மனோஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருச்சி கம்பரசம்பேட்டையை சேர்ந்த விஜயபாஸ்கர், முத்து ஆகியோர் கேட்டு கொண்டதின்பேரில், மைசூரூவை சேர்ந்த பவர்லால் என்பவர் காய்கறி மூட்டைகளுக்கு இடையே குட்கா பொருட்களை பதுக்கி அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயபாஸ்கர் மற்றும் முத்துவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான விசாரணையில் விஜயபாஸ்கர் தொடர்ந்து இதுபோல் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்து இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கியது தெரியவந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விஜயபாஸ்கரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கொலை கைதிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை கைதிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
2. வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
3. வழிப்பறி திருடன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வழிப்பறி திருடன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
4. சிறுமி பலாத்கார வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறுமி பலாத்கார வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5. புகையிலை பொருட்களை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருக்கோவிலூர் பகுதியில் புகையிலை பொருட்களை கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது