தினத்தந்தி புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியம், பெருமத்தூர் குடிக்காடு கிராமத்தில் ஊருக்கு பொதுவான பகுதி மற்றும் பள்ளி அருகே ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது விரிசல் விட்டு சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெருமத்தூர், பெரம்பலூர்.
கதவுகள் உடைந்து காணப்படும் கழிவறை
திருச்சி மாவட்டம், மண்ணச்நல்லூர் வட்டம் திருப்பைஞ்சீலி ஞீலிவனேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் பயன்பாட்டிற்காக கோவிலின் அருகே கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறையின் கதவுகள் உடைந்து காணப்படுவதால் இதனை பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலச்சந்தர், சுனைப்புகழ்நல்லூர், திருச்சி.
விளம்பர கூடாரமாக மாறிய நிழற்குடை
கரூர் சுங்ககேட் அருகே பஸ் ஏற வரும் பயணிகள் அமரும் வகையில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பயணிகள் நிழற்குடை பராமரிப்பு இன்றி உள்ளதால் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டும் கூடாரமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அப்புறப்படுத்தி பயணிகள் நிழற்குடையை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கரூர்.
கோவில் வனப்பகுதியில் கொட்டப்படும் கழிவுகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி வட்டம்
ஸ்ரீ மெய்யர் அய்யனார் கோவிலை சுற்றியுள்ள பழமையான மரங்கள் உள்ள வனப்பகுதியில் கோழி கழிவுகளையும், ஓட்டல்களில் சேகரிக்கப்படும் கழிவுகளையும், காலி பாட்டில்களையும் இங்கு கொண்டு வந்துகொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
யோகராஜ், எரிச்சி சிதம்பரவிடுதி, புதுக்கோட்டை.
பழுதடைந்த பாதாள சாக்கடை மூடி
திருச்சி தாரநல்லூர் பூக்கொல்லை தெரு அரியமங்கலம் கோட்டம் 14-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள ஜின்னா திடல் பகுதியில் கடந்த நான்கு மாதமாக சாலையின் நடுவில் பாதாள சாக்கடைக்கு மேல் போடப்பட்டுள்ள மேல்முடி தகரம் உடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் சாலையின் நடுவே பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் மோட்டார் சைக்கிளை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் பயத்துடனே இந்த பகுதியை கடந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சையது முஸ்தபா, பூக்கொல்லை தெரு, திருச்சி.
சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள்
புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யும்போது இதில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த குப்பைகள் சாலையில் வாகனங்கள் செல்லும் போது பறந்து விழுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராமகிருஷ்ணன், புதுப்பட்டி, புதுக்கோட்டை.
சேறும், சகதியுமான சாலை
திருச்சி மாநகராட்சி 63-வது வார்டு அஷ்டலட்சுமி நகர், அஷ்டலட்சுமி விஸ்தரிப்பு, ஆர்.கே.புரம் உள்ளிட்ட பகுதியில் முறையான தார் சாலை வசதி இல்லாததால் மழைபெய்யும்போது மண் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும், நடந்து செல்லும் பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அஷ்டலட்சுமி நகர், திருச்சி.
கடிக்க வரும் நாய்கள்
திருச்சி பீமநகர் மாசிங்கபேட்டையில் அதிக அளவில் தெருநாய்கள் உள்ளன. இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிக்க வருவதால் அவர்கள் அச்சத்துடனேயே செல்லும் நிலை உள்ளது. மேலும் திடீரென நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையில் ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தினேஷ், திருச்சி.
முறிந்து விழும் நிலையில் உள்ள மரம்
திருச்சி மாவட்டம், உறையூர் போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் அருகே உள்ள மரம் கரையான் அரித்து கீழே விழும் நிலையில் உள்ளது. தற்போது இந்த மரம் அருகில் உள்ள சுவற்றில் மோதி தாங்கி கொண்டிருக்கிறது.
மரத்தின் அருகே வாகன பழுது பார்க்கும் கடை உள்ளதால் வாகனங்கள் மேல் எப்போது வேண்டுமானாலும் இந்த மரம் உடைந்து விழும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உறையூர், திருச்சி.
சாலையில் செல்லும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதி 19 வது வார்டு மதுரை ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம் காட்டையாம்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு இன்றி பழுதடைந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அணியாப்பூர், திருச்சி.
கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு
திருச்சி மாவட்டம், பாலக்கரை மெயின் ரோடு, இரட்டை பிள்ளையார் கோவில் தெரு ரெயில்வே கேட் போகும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொது மக்கள், பாலக்கரை, திருச்சி.
மின் இணைப்பை மாற்ற வேண்டும்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள 1வது வார்டு விடத்திலாம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகே புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய மின்கம்பத்தில் உள்ள மின் இணைப்பை புதிய மின்கம்பத்திற்கு மாற்றவில்லை. எனவே விபத்து ஏற்படும் முன்பு பழைய மின்கம்பத்தில் உள்ள மின் இணைப்பை புதிய மின்கம்பத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மணப்பாறை, திருச்சி.
Related Tags :
Next Story