மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்றவர் லாரி மோதி பலி + "||" + A motorcyclist was killed in a truck collision

இருசக்கர வாகனத்தில் சென்றவர் லாரி மோதி பலி

இருசக்கர வாகனத்தில் சென்றவர் லாரி மோதி பலி
இருசக்கர வாகனத்தில் சென்றவர் லாரி மோதி பலி
தளவாய்புரம்
தளவாய்புரம் பி.வி.எஸ். தெருவை சேர்ந்த அய்யனார்(வயது 66). இவர் இங்குள்ள கூட்டுறவு மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ரேவகா(வயது 58) என்ற மனைவியும், அன்பு, கார்த்திகா என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் இருசக்கர வாகனத்தில் தளவாய்புரத்திலிருந்து அயன் கொல்லங்கொண்டான் பகுதிக்கு புறப்பட்டுச் சென்றார். இவர் கொல்லங்கொண்டான் விலக்கு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி இருசக்கரவாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சத்தியவாசன்(23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பலி
காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலை தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
2. அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு
தளவாய்புரம் அருகே அரசு பஸ்சில் இருந்து இறங்கியபோது சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார். இதுதொடர்பாக பஸ் டிரைவர்-கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
3. புதிய மின்கம்பம் முறிந்து உச்சியில் இருந்து விழுந்த ஊழியர் பலி
சிவகாசி அருகே புதிய மின்கம்பம் முறிந்து அதன் உச்சியில் இருந்து கீேழ விழுந்த ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலும் 2 மின் ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்
4. கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார்.
5. திருவரங்குளம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி
திருவரங்குளம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.