ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை


ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை
x
தினத்தந்தி 23 Oct 2021 1:52 AM IST (Updated: 23 Oct 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை செய்து கொண்டார்.

வி.கைகாட்டி:

தூக்கில் தொங்கினார்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த முனியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 30). இவர் ரெட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார்.
கணேசன் நேற்று காடுவெட்டாங்குறிச்சி கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு முனியங்குறிச்சியில் உள்ள வீட்டிற்கு திரும்பி வந்தார். அவர் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது மாட்டுக்கொட்டகையில் ராஜேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தற்கொலை
இது குறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார், அங்கு வந்து ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், ராஜேஸ்வரிக்கு தீராத வயிற்று வலி இருந்ததாகவும், பல்வேறு டாக்டர்களிடம் காண்பித்தும் வயிற்று வலி குணமாகவில்லை என்றும், இதனால் மனமுடைந்த அவர் நேற்று மதியம் வீட்டின் பின்புறமுள்ள மாட்டுக்கொட்டகையில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், தெரியவந்தது.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இறந்த ராஜேஸ்வரிக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story