தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்; கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியே கொன்றது அம்பலம்


தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்; கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியே கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 23 Oct 2021 2:35 AM IST (Updated: 23 Oct 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

கலபுரகியில், தொழிலாளி ஒருவர் தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலை கண்டித்ததால் அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலமாகி உள்ளது. கள்ளக்காதலனை பிடித்து கிராம மக்கள் தர்ம-அடி கொடுத்தபோது இந்த குட்டு வெளிப்பட்டது.

பெங்களுரு: கலபுரகியில், தொழிலாளி ஒருவர் தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலை கண்டித்ததால் அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலமாகி உள்ளது. கள்ளக்காதலனை பிடித்து கிராம மக்கள் தர்ம-அடி கொடுத்தபோது இந்த குட்டு வெளிப்பட்டது. 

குடிபோதையில் கீழே விழுந்து...

கலபுரகி மாவட்டம் சேடம் தாலுகா ஈர்னாப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா(வயது 38), தொழிலாளி. இவரது மனைவி அனுசுயா. ராஜப்பாவுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் அவர் குடிபோதையில் மனைவி அனுசுயாவுடன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி ராஜப்பா இறந்து விட்டார். மதுஅருந்தும் பழக்கம் இருந்ததால் அவர் கீழே தவறி விழுந்து இறந்து விட்டதாக அனுசுயா கூறினார்.

இதனை ராஜப்பாவின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களும் நம்பி விட்டனர். பின்னர் ராஜப்பாவின் உடலும் இறுதி சடங்கு செய்யப்பட்டது. இதுபற்றி போலீசில் எந்த புகாரும் செய்யப்படாமல் இருந்தது. இதற்கிடையில், கணவர் இறந்த பின்பு அனுசுயா, தெலுங்கானா மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீசைல் என்பவருடன் சுற்றித்திரிந்தார். மேலும் கிராமத்தில் உள்ள ராஜப்பாவின் வீட்டில் வைத்தே 2 பேரும் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

கள்ளத்தொடர்பு

இதுபற்றி அறிந்த கிராம மக்கள், ஸ்ரீசைலை பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து தா்ம-அடி கொடுத்தார்கள். அப்போது இச்சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது கிராம மக்கள் தர்ம-அடி கொடுத்ததில் ஸ்ரீசைல், தனக்கும் அனுசுயாவுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், தாங்கள் 2 பேரும் சேர்ந்து தான் ராஜப்பாவை கொலை செய்ததாகவும் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், சேடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ஸ்ரீசைல் மற்றும் அனுசுயாவை கைது செய்து விசாரித்தனர். அப்போது ராஜப்பாவை கொலை செய்ததை 2 பேரும் ஒப்புக் கொண்டனர்.

அதாவது கொரோனா காரணமாக சில மாதங்கள் ராஜப்பா தனது மனைவி அனுசுயாவின் சொந்த ஊரான தெலுங்கானாவுக்கு சென்று தங்கி இருந்தார். அப்போது அனுசுயாவுக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஸ்ரீசைலுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுபற்றி ராஜப்பாவுக்கு தெரிந்ததும் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

கழுத்தை நெரித்து கொலை

அத்துடன் தெலுங்கானாவில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு ராஜப்பா வந்துள்ளார். அதன்பிறகும், அனுசுயா, ஸ்ரீசைலின் கள்ளத்தொடர்பு தொடர்ந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ராஜப்பா உயிருடன் இருந்தால் கள்ளத்தொடர்பை தொடர முடியாது என்று கருதிய அனுசுயா தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கு ஸ்ரீசைலும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடந்த ஆகஸ்டு 24-ந் தேதி ராஜப்பாவுக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளனர்.

அந்த மதுவை குடித்த அவர் மயக்கம் அடைந்துள்ளார். அப்போது ஸ்ரீசைலும், அனுசுயாவும் சேர்ந்து ராஜப்பாவின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள். பின்னர் தனது கணவர் குடிபோதையில் கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறி அனுசுயா நாடகமாடியது தெரியவந்தது. கைதான 2 பேர் மீதும் சேடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story