அரும்பாக்கத்தில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டை சுற்றி கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது
அரும்பாக்கத்தில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டை சுற்றி கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,
அரும்பாக்கம் கண்ணப்பன்நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கபாசியம் (வயது 65). இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் சுற்றி வருவதாக அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அரும்பாக்கம், பாலவிநாயகர் நகர் அருகில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து அவரிடம் இருந்து ஒரு கத்தி மற்றும் பிளேடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அரும்பாக்கம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவரை விசாரித்ததில், பிடிபட்டவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிவா (26), என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் எதற்காக அவர் கத்தியுடன் திரிந்தார்? என பல்வேறு கோணங்களில் அரும்பாக்கம் போலீசார் சிவாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story