தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவராக தாமோதரன் ஏகமனதாக தேர்வு - துணைத்தலைவராக திம்மலை நெடுஞ்செழியன் பதவியேற்பு


தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவராக தாமோதரன் ஏகமனதாக தேர்வு - துணைத்தலைவராக திம்மலை நெடுஞ்செழியன் பதவியேற்பு
x
தினத்தந்தி 23 Oct 2021 3:47 PM IST (Updated: 23 Oct 2021 3:47 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த மறைமுக தேர்தலில் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தியாகதுருகம்,

தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக 3-வது வார்டு கவுன்சிலர் தாமோதரன், துணை தலைவராக 4-வது வார்டு கவுன்சிலரும், தியாகதுருகம் ஒன்றிய தி.மு.க. செயலாளருமான திம்மலை நெடுஞ்செழியன் ஆகியோர் ஏகமனதாக தேர்வுசெய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் இருவரும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் செந்தில்முருகன், இந்திராணி ஆகியோர் முன்னிலையில் பதவி ஏற்றனர்.

தொடர்ந்து கவுன்சிலர்கள் சண்முகம், தேவிபழனிவேல், தனலட்சுமி, தமிழரசி, கொளஞ்சி, அய்யாசாமி, பச்சையம்மாள், செல்லம்மாள் மாணிக்கம், முத்துக்குமார் உள்ளிட்ட அனைவரும் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மலையரசன், எத்திராசு, ஒன்றிய துணைச் செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி நெடுஞ்செழியன், அவைத்தலைவர் நூர்முஹம்மது, ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பு.இளங்கோவன், கலியன், அப்போலியன், ராமலிங்கம், நிர்வாகிகள் ஏழுமலை, அப்துல் கபூர் உள்ளிட்ட அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், மற்றும் துணை தலைவர் திம்மலை நெடுஞ்செழியன் ஆகியோருக்கு கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சால்வை, பூங்கொத்து ஆகியவற்றை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயனிடம் அனைவரும் வாழ்த்து பெற்றனர்.

Next Story