ஊத்தங்கரையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு


ஊத்தங்கரையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
x
தினத்தந்தி 23 Oct 2021 4:13 PM IST (Updated: 23 Oct 2021 4:13 PM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஊத்தங்கரை:
ஊத்தங்கரையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டாரங்களில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு பணிகள் ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி அருகில் நடைபெற்றது. இதில் 290 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
பள்ளி வாகன விதி 2012-ன் படி அனைத்து வாகனங்களிலும் அவசர வழி தீயணைப்பு கருவி மற்றும் வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாகனங்களை இயக்கும் போது டிரைவர்கள் கவனமாக இயக்க வேண்டும் என வலிவுறுத்திய அதிகாரிகள் பின்னர்் வாகன ஆய்வை மேற்கொண்டனர்.
குறைகள் கண்டறியப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு சரி செய்யப்பட்ட பின்பு மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் சாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் அன்புச்செழியன் ஆகியோர் ஈடுபட்டனர். 
மேலும் மாவட்ட நிர்வாகம் போலீஸ் துறை மற்றும் பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து ஆய்வு பணிகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டனர்.

Next Story