வேரோடு பிடிங்கி எறியப்பட்ட பனைமரங்கள் அதே பகுதியில் மீண்டும் நடப்பட்டன


வேரோடு பிடிங்கி எறியப்பட்ட பனைமரங்கள் அதே பகுதியில் மீண்டும் நடப்பட்டன
x
தினத்தந்தி 23 Oct 2021 6:03 PM IST (Updated: 23 Oct 2021 6:03 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே வேரோடு பிடிங்கி எறியப்பட்ட பனைமரங்கள் அதே பகுதியில் மீண்டும் நடப்பட்டன

செய்யாறு

செய்யாறு அருகே வேரோடு பிடிங்கி எறியப்பட்ட பனைமரங்கள் அதே பகுதியில் மீண்டும் நடப்பட்டன

தமிழக மாநில மரமான பனை மரங்களின் அழிவை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பனை மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டரின் அனுமதி பெறவேண்டும் எனக் கூறப்படுகிறது. 

செய்யாறு-சுமங்கலி சாலையில் நெடும்பிறை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கருங்கல் ஜல்லி உடைக்கும் ஆலை அமைய உள்ளது.

 அதற்காக, அந்த இடத்தை சுத்தம் செய்து சமன் படுத்துவதற்காக சாலையோரம் இருந்த 20-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு வேரோடு பிடுங்கி எறியப்பட்டன. 

பனை மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டதை இயற்கை ஆர்வலர்கள் படத்துடன் உதவி கலெக்டர் விஜயராஜிடம் புகார் ெசய்தனர். 

வேரோடு பிடுங்கி எறியப்பட்ட பனை மரங்களில் 20 அடி உயரமுள்ள 4 பனை மரங்களை உதவி கலெக்டர் உத்தரவின்பேரில் பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு அதே பகுதியில் மீண்டும் நடப்பட்டன. 

பனை மரங்களை வெட்டினால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என உதவி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story