திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் மேம்பாலங்கள் ஆய்வு பணி


திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் மேம்பாலங்கள் ஆய்வு பணி
x
தினத்தந்தி 23 Oct 2021 6:47 PM IST (Updated: 23 Oct 2021 6:47 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் மேம்பாலங்கள் ஆய்வு பணி நடந்தது.

கொடைரோடு:
திண்டுக்கல்- மதுரை 4 வழிச்சாலையில் சில இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மேம்பாலங்கள் தரமானதாக உள்ளதா என்று அதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இதற்காக ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட நவீன எந்திரத்தின் மூலம் பாலங்களில் ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணி தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைமை மேலாளர் சீனிவாசன் தலைமையில் நடக்கிறது. இதில் உதவி பொறியாளர்கள் அயன்குமார், வேல்முருகன் சுங்கச்சாவடி தல பொறியாளர் பாலகுமார் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story