தாண்டிக்குடியில் பலத்த மழை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சுவர் இடிந்தது


தாண்டிக்குடியில் பலத்த மழை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சுவர் இடிந்தது
x
தினத்தந்தி 23 Oct 2021 7:06 PM IST (Updated: 23 Oct 2021 7:06 PM IST)
t-max-icont-min-icon

தாண்டிக்குடியில் பெய்த பலத்த மழையால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க சுவர் இடிந்து விழுந்தது.

பெரும்பாறை:
பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டதுடன் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. 
இதில் தாண்டிக்குடியில் பெய்த கன மழையால் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக கட்டிடத்தின் படிக்கட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதேபோல் தாண்டிக்குடி-பட்டலங்காடு பிரிவு இடையே காளான் பண்ணை அருகே ரோட்டின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் பல இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இடிந்து விழும் நிலையில் உள்ள தடுப்புச்சுவர்ககளை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story