திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே புறக்காவல் நிலையம் திறப்பு


திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே புறக்காவல் நிலையம் திறப்பு
x

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே புதிதாக நவீன வசதிகளுடன் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி, புறக்காவல் நிலையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பேசினார். அப்போது நகர், புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும். நகர், புறநகர் பகுதிகளில் சந்தேகப்படும் வகையில் யாரேனும் சுற்றித்திரிவதை பார்த்தால் புறக்காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அங்கு பணியில் உள்ள போலீசார் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்றார். இதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Next Story