சாலையில் நாற்றுநட்டு கிராம மக்கள் போராட்டம்


சாலையில் நாற்றுநட்டு கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2021 10:24 PM IST (Updated: 23 Oct 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

கடலாடி அருகே கழிவுநீருடன் மழைநீர் தேங்கியுள்ள சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் அந்த சாைலயில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

சாயல்குடி
கடலாடி அருகே கழிவுநீருடன் மழைநீர் தேங்கியுள்ள சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் அந்த சாைலயில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையில் கழிவுநீர்
கடலாடி அருகே சவேரியார்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட சவேரியார் சமுத்திரம் கிராமத்தில் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. 
தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் தேங்கி உள்ளது. இதில் கொசு உற்பத்தியாகி துர்நாற்றம் வீசி வருவதோடு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி இருக்கிறது.
போராட்டம்
இதை சீரமைக்க கோரி மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும், அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மழை நீருடன் சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ள சாலையில் நாற்றுகளை நடவு செய்து தலையில் முக்காடு அணிந்து ஒப்பாரி வைத்து நூதனமுறையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story