திண்டிவனம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 51 பேர் மீது வழக்கு


திண்டிவனம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 51 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Oct 2021 10:32 PM IST (Updated: 23 Oct 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகேசாலை மறியலில் ஈடுபட்ட 51 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியத்தில் நேற்று முன்தினம் நடந்த தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது.

 இதில் சுயேச்சை கவுன்சிலர் ஒருவருக்கு ஓட்டுபோட அனுமதிக்காததை கண்டித்து, ஈச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜதுரை என்பவரின் தலைமையில் ஒரு தரப்பினர், திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது, சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் மீது கல் வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது.   இது குறித்து சாரம் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் ஒலக்கூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ராஜதுரை, சிவக்குமார் உள்ளிட்ட 51 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story