மாவட்ட செய்திகள்

மூங்கில்துறைப்பட்டு அருகேபள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை + "||" + Near the bamboo grove Schoolgirl commits suicide by drinking poison

மூங்கில்துறைப்பட்டு அருகேபள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை

மூங்கில்துறைப்பட்டு அருகேபள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
மூங்கில்துறைப்பட்டு அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ஆற்கவாடி நடுத்தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் பிரியதர்ஷினி(வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.   

இந்தநிலையில் ஏழுமலைக்கும், அவரது மனைவி பூங்கொடிக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரியதர்ஷினி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
விருதுநகர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை ெசய்து கொண்டார்.
4. இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.