ஆடு திருடிய 3 பேர் சிக்கினர்


ஆடு திருடிய 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 23 Oct 2021 10:38 PM IST (Updated: 23 Oct 2021 10:38 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆடு திருடிய 3 பேரை சிக்கினர்.

ஸ்ரீவைகுண்டம்:
செய்துங்கநல்லூர் ரெயில்வே தெருவை சேர்ந்த சின்னத்துரை (வயது 55) என்பவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் கருங்குளம் வன்னியராஜா கோவில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் இசக்கிதுரை (27), வசவப்பபுரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சின்னத்துரை மகன் முருகன் (21) மற்றும் கருங்குளம் செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்லையா மகன் இசக்கிமுத்து (36) ஆகிய 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து சின்னதுரை வீட்டிலுள்ள ஆடு ஒன்றை திருடியபோது கையும் களவுமாக பிடிபட்டனர். இதுகுறித்து சின்னதுரை அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்து திருடிய ஆட்டையும், திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story